கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் மாறிய மனம்; குடும்பத்தோடு சென்ற இளம்பெண், விரக்தியில் காதலன் விபரீத முடிவு.!

கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் மாறிய மனம்; குடும்பத்தோடு சென்ற இளம்பெண், விரக்தியில் காதலன் விபரீத முடிவு.!


Coimbatore Pollachi Love Girl Separate After getting Marriage 2 Days Love Boy Suicide Attempt 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் சக்கரவர்த்தி. தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொங்கநாட்டான்புதூர் பகுதியில் இளம்பெண் வசித்து வருகிறார். 

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறியதால், கடந்த ஆறு மாதமாக காதலித்து வந்துள்ளனர். பின் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவெடுத்து, கடந்த ஜூலை ஒன்றாம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். 

அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்ட நிலையில், மகள் மாயமானதால் அவரை தேடிய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர். இந்த புகாரை அறிந்த காதல் ஜோடி பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். 

Coimbatore

அங்கு விசாரணை நடத்திய அதிகாரிகள், இளம்பெண்ணை அவரின் விருப்பப்படி அருண் சக்கரவர்த்தியுடன் அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இளம் பெண்ணை உறவினர்கள் சிலர் சந்தித்து ஆலோசனை கூறிய நிலையில், இளம்பெண் அருண் சக்கரவர்த்தி கட்டிக்கொடுத்த தாலியை கழற்றி கையில் கொடுத்துவிட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். 

காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற விரக்தியில் இருந்த அருண் சக்கரவர்த்தி, விஷம் குடித்து மயங்கி இருக்கிறார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.