மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.. கோவையில் உடற்கல்வி ஆசிரியர் அதிர்ச்சி செயல்., பதறும் பெற்றோர்கள்.!coimbatore-govt-school-pet-teacher-arrest-pocso-act

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரபாகரன். இவர் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிய வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் இந்த விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். 

இதனைக்கேட்டு பதறிப்போன பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர், இன்று பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அதிகாரிகள் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

இதனையடுத்து,  பெற்றோர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் லேசான பரபரப்பை ஏற்படுத்தியது.