மகாத்மா காந்தியின் 150 ஆம் ஆண்டு நிறைவு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற தமிழக முதல்வர்!



Cm

மகாத்மா காந்தி 150 ஆம் ஆண்டு நிறைவு விழா ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைப்பெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார் அவருடன் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

மேலும் இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்கின்றனர். கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடக்கிறது.

CM

மேலும் முதல்வர் அவர்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதில் பிரதமருடனான சந்திப்பின்போது, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி கோருவதற்கான மனுவை அளிப்பார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிறகு மாலை 3 மணியளவில் ஆலோசனை கூட்டத்தில் பங்கெடுத்த பிறகு இன்று இரவே தமிழகம் திரும்பயுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.