சென்னைக்கு கிடைத்த பெருமை!. ஆசியாவிலேயே முதல் பிரமாண்ட சாக்லேட் கார்!

சென்னைக்கு கிடைத்த பெருமை!. ஆசியாவிலேயே முதல் பிரமாண்ட சாக்லேட் கார்!


chocolate car in chennai

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் "சென்னையில் திருவையாறு"  என்ற இசை நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியானது வரும் 25-ஆம் தேதி வரை நடக்கிறது. 

இந்த நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களை வியக்கவைக்கும் வகையில் பிரமாண்டமான சாக்லேட் கார் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சாக்லேட்டை பல நாட்களாக சமையல் கலை நிபுணர்கள் தயாரித்துள்ளனர். 

அவர்கள் டொயட்டா காரை கவரால் சுற்றி, அதன் மீது சாக்லேட் கலவை, ஜேம்ஸ் சாக்லேட், கோக்கோ பவுடர் போன்ற பொருட்களை பயன்படுத்தி, மொத்தம் 350 கிலோ எடையுள்ள சாக்லேட்டை பயன்படுத்தி 4 நாட்கள் செலவு செய்து சாக்லேட் காரை உருவாக்கியுள்ளனர்.

choc

இந்த சாக்லேட் காரானது, ஆசியாவிலேயே முதல் சாக்லேட் கார் ஆகும். காரில் உள்ள சாக்லேட் ஆனது ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத வகையில் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த சாக்லேட் கார் ஏ.சி அறையில் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வரும் பரவகையாளர்கள் சாக்லேட் காரை வியப்புடன் பார்வையிடுகிறார்கள். காரின் முன்பு நின்றுக்கொண்டு புகைப்படங்களும் எடுத்துக்கொள்கின்றனர்.

கார் இருக்கும் அறையில் காரை சுற்றிலும் கீழே சாக்லேட்டை தூவி உள்ளனர். இந்த இசை நிகழ்ச்சி முடிவடையும் 25-ந்தேதி அன்று அந்த சாக்லேட்டை பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளனர்.