படுக்கையறையில் மருமகள்.! தண்ணீர் டேங்கில் பேரன்.! வீடு திரும்பிய மாமனாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வெளியான பகீர் சம்பவம்!child-murder-and-mother-suicide-in-viruthunagar

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சின்னபுளியம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் திருக்குமரன். அவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. மேலும் அந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் தீபக் என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளது. 

 கணவர் திருக்குமரன் வெளிநாட்டில் இருந்த நிலையில் மகாலட்சுமி மற்றும் குழந்தை இருவரும் மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாமனார் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் மருமகளை அழைத்துள்ளார். ஆனால் அறையிலிருந்து வெகு நேரமாகியும் மகாலட்சுமி வெளியே வராததால், சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியே பார்த்துள்ளார். 

dead

அங்கு மருமகள் மகாலட்சுமி தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதனைக்கண்ட முருகேசன் அதிர்ச்சியில் அலறி உள்ளார் இந்நிலையில் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு விரைந்து அவர்கள் மகாலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையை காணவில்லை என வீடு முழுவதும் தேடியபோது குழந்தை மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் டேங்கில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் போலீசார் தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.