தமிழகம்

8 வருடங்கள்! 500 குழந்தைகள் ஆபாச வீடியோக்கள்! கைது செய்யப்பட்ட சென்னை இளைஞர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

chennai youngman arrest for seeing sexual abuse video

சமீபகாலமாக பெண்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெருமளவில் அதிகரித்து வருகிறது.மேலும் குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்பதில் இந்தியா முதலிடம் பிடித்தது. அதிலும் குறிப்பதை தமிழ்நாட்டில்தான் அதிகமான ஆபாச படம் பார்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் வலைதளங்களில் குழந்தைகளைக் காட்சிப்படுத்தி  ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் பணிகளில் தற்போது தமிழக காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து ஐபி அட்ரஸ்களை வைத்து போலீஸார் சோதனையிட்டு வந்தனர்.

இந்நிலையில்  குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்த்த 3000 பேரின் பட்டியல் தயார் என தமிழக குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கில் முதன் முதலாக திருச்சியை சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அவரை தொடர்ந்து சிறார் ஆபாச படங்களை பார்த்த15க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது  சென்னை அம்பத்தூரை சேர்ந்த டியூசன் ஆசிரியை மகனான, கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்ற ஹரீஷ் என்ற இளைஞர்  கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ஆபாசப் படங்களை பார்ப்பதை பொழுது போக்காக வைத்திருந்துள்ளார். மேலும் தற்போதுவரை 500க்கும்   மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் வரை பதிவிறக்கம் செய்துவைத்துள்ளார்.

 
 
 


Advertisement