இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
பல்கலைக்கழக வளாகத்தின் தண்ணீர் தொட்டியில் மிதந்த பெண்ணின் சடலம்.! உபியில் அதிர்ச்சி.!

பெண்ணின் சடலம் :
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் கௌதம் புத்தர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு வேலை செய்கின்ற ஊழியர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திலேயே குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு பெண்ணின் சடலம் கிடைப்பதாக காவல் துறைக்கு நேற்று தகவல் அளிக்கப்பட்டது.
கணவன், மனைவி தகராறு :
இந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற அவர்கள் உடலை கைப்பற்றி விசாரித்ததில் அவர் தனது மாமியார் மற்றும் கணவருடன் வசித்து வருவது தெரியவந்துள்ளது. இது பற்றி குடியிருப்பு பகுதியில் இருந்த அண்டை வீட்டாரிடம் விசாரித்த போது அவர்கள் கணவருக்கும் இறந்து போன பெண்ணுக்கும் அடிக்கடி தவறாக வரும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட அதே நேரத்தில் அந்தப் பெண்ணின் மாமியாரும் கணவரும் தலைமறைவாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அருகில் உள்ள மருத்துவமனையில் அந்த பெண்ணின் கணவர் வேலை செய்து வந்துள்ளார்.
போலீசார் தீவிரம் :
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் இருவருக்கும் தகராறு வந்த நிலையில் பெண்ணை கொன்றுவிட்டு கணவரும் மாமியாரும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கலாம் என்று காவல்துறையினர் நினைக்கின்றனர். தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்ய தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.