கணவன் கண் முன்னே துடிக்க துடிக்க இறந்த மனைவி.! டூ வீலரின் பின்னால் மோதிய லாரி..!

கணவன் கண் முன்னே துடிக்க துடிக்க இறந்த மனைவி.! டூ வீலரின் பின்னால் மோதிய லாரி..!


Chennai young girl dead in road accident

பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் ராமரெட்டிபாளையத்தைச் யுவராஜ் (28), இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் இருவரும் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு  இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளனர்.

செங்குன்றம் – திருவள்ளூர் கூட்டு சாலை அருகே இருவரும் வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த கொடூர விபத்தில், யுவராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

accident

ஆனால், யுவராஜின் மனைவி ஜெயலட்சமி பலத்த காயமடைந்து கணவன் கண் முன்னே துடி துடித்து இறந்துள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.