தமிழகம்

இளம் பெண் காணாமல்போய் 4 நாள் ஆச்சு.! யாராவது பாத்தா சொல்லுங்க..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

Summary:

Chennai women ambika missing for family problems

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் அருகே உள்ள வடிவேல் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கும் அம்பிகா என்ற பெண்ணிற்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடிந்த நிலையில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி காலை விஜயகுமாருக்கும், அம்பிகாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு அம்பிகா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால் விஜயகுமார் இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்களும் பல இடங்களில் தேடியும் அம்பிகா கிடைக்கவில்லை. உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அம்பிகாவின் தொலைபேசி சுவிட்ச் ஆப் ஆகியுள்ள நிலையில், எனது தங்கை காணாமல்போய் இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிறது, உங்களில் யாருக்காவது அம்பிகா பற்றி தெரியவந்தால் 6382367007 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.


Advertisement