தடம்மாறி வி.ஆர். மாலில் முழு போதையில் குத்தாட்டம் போட்ட இளசுகள்., இளம்பெண்கள்.. பரிதாபமாக பறிபோன உயிர்.!

தடம்மாறி வி.ஆர். மாலில் முழு போதையில் குத்தாட்டம் போட்ட இளசுகள்., இளம்பெண்கள்.. பரிதாபமாக பறிபோன உயிர்.!


Chennai VR Mall Drug Party Death

சென்னையில் உள்ள கோயம்பேடு திருமங்கலம் பகுதியில் வி.ஆர் மால் செயல்பட்டு வருகிறது. இந்த மாலில் உள்ள நான்காவது தளத்தில் நேற்று மது மற்றும் போதை விருந்துடன் ஆடல், பாடல் நடப்பதாக அண்ணாநகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சரக திருமங்கலம் காவல் துறையினருடன் மதுவிலக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரையவே, வி.ஆர் மாலில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் மதுவிருந்தில் ஈடுபட்டது அம்பலமானது. 

அவர்களை நிகழ்விடத்தில் இருந்து வெளியேற காவல் துறையினர் எச்சரிக்கவே, தள்ளாடிய போதையில் இருந்த இளசுகள் அறைபோதை மயக்கத்தில் வெளியேறினார். அப்போது, விருந்தில் கலந்துகொண்டு இருந்த பிரவீன் (வயது 23) என்பவர் மயங்கி விழவே, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அளவுக்கு அதிகமான போதை காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். 

இந்த போதை விருந்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர் 24 வயது மற்றும் 21 வயதுக்கும் கீழ் இருப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 844 விலை உயர்ந்த மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த காவல் துறை விசாரணை நடைபெற்று வருகிறது. போதை பார்ட்டியில் கலந்துகொள்ள இணையத்தளத்தில் டிக்கெட் விற்பனையும் நடைபெற்றுள்ளது. டிக்கெட் ரூ.1500 க்கு விற்பனை செய்யப்பட்டு, பிரேசில் டி.ஜெ பாட்டு கச்சேரியும் நடந்துள்ளது.