அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
செக்ஸ் மசாஜ் செய்யச்சொல்லி அட்டகாசம்; 23 வயது இளம்பெண்ணின் கை-கால்களை கட்டிப்போட்டு பயங்கரம்.. சென்னையில் அதிர்ச்சி.!
தனியார் மசாஜ் சென்டருக்கு வந்த இளைஞன் செக்ஸ் மசாஜ் செய்ய மறுத்த பெண்ணின் கை-கால்களை கட்டிப்போட்டு நகையை பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் தனியார் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. மசாஜ் சென்டருக்கு கடந்த 5ம் தேதி வருகை தந்த வாலிபர் ரூ.1000 கட்டணம் கொடுத்து 23 வயது பெண் உதவியுடன் மசாஜ்க்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், பெண்ணின் அழகில் மயங்கிப்போன இளைஞன், அவரிடம் செக்ஸ் மசாஜ் செய்யுமாறு கூறியுள்ளார்.
இந்த விசயத்திற்கு இளம்பெண் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த இளைஞன் பெண்ணை சரமாரியாக தாக்கி கை-கால்களை கட்டிப்போட்டு இருக்கிறார். அவர் அணிந்திருந்த செயின் மற்றும் கம்மலை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார். தனியொரு அறையில் நடந்த சம்பவம் பிற ஊழியர்களுக்கு தெரியவில்லை.

எதற்ச்சையாக மற்றோரு பணியாளர் வந்தபோது பெண் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அனகாபுத்தூரை சேர்ந்த கட்டிய தொழிலாளி அஜித் @ சுரேஷை (வயது 25) கைது செய்தனர்.