அடிப்பாவி.. உல்லாசத்தில் பிறந்த குழந்தை.. ஏரியில் வீசி கொன்ற தாய்; பரபரப்பு வாக்குமூலம்.!
சென்னையில் உள்ள வேளச்சேரி அருகே ஏரியில் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் உறவில் இருந்த பெண் கர்ப்பமானதை மறைத்து வீட்டிலேயே குழந்தை பெற்றெடுத்ததாகவும், அது தவறான உறவில் பிறந்த குழந்தை என்பதால் ஏரியில் வீசி கொன்றதாகவும் குழந்தையின் தாய் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.