பள்ளத்தில் சிக்கியவர்கள் நிலை என்ன?.. மீட்பு பணிகள் தாமதமாவதால், உறவினர்கள் பரிதவிப்பு.. மீளாத்துயரில் வேளச்சேரி.!

பள்ளத்தில் சிக்கியவர்கள் நிலை என்ன?.. மீட்பு பணிகள் தாமதமாவதால், உறவினர்கள் பரிதவிப்பு.. மீளாத்துயரில் வேளச்சேரி.!



chennai-velachery-flood-auto-lpg-gas-station-near-new-c

 

சென்னையை புரட்டி எடுத்த மிக்ஜாங் புயல், ஆந்திராவில் கரையை கடந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழையை சந்தித்த சென்னை வெள்ளத்தின் பிடியில் சிக்கி மீளத்தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், வேளச்சேரியில் உள்ள பேபி நகர், மடிப்பாக்கத்தில் உள்ள ராம் நகர் உட்பட பல இடங்களில் தண்ணீர் வடியாமல் இருப்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். தற்போது வரை உணவு குடிநீர் போன்றவை இல்லாமல் மக்கள் அவதிப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வேளச்சேரியில் உள்ள வீனஸ் காலனி பகுதியில் நண்பனின் கர்ப்பிணி மனைவி மற்றும் குடும்பத்திற்காக உதவி கேட்கும் இளைஞரின் ட்விட் பதிவு வைரலாகியுள்ளது. 

நேற்று வேளச்சேரி மதுவின்கரை சாலையில் உள்ள கியாஸ் நிலையம் அருகே கட்டுமான பணிகள் நடந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தின் காணொளி வெளியாகியுள்ளது. 

நேற்று மழையின்போது பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்ட நிலையில், அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததாகவும், அதில் ஈடுபட்ட 11க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை தெரியவில்லை. 

அவர்களை மீட்கும் பணியானது தற்போது வரை தொடங்கப்படவில்லை. 3 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியோர் அங்கு சிக்கியுள்ளனர். நீர் நிரம்பி காணப்படுவதால், அதனை வெளியேற்ற மோட்டார் உட்பட பிற வசதியும் ஏற்படுத்தி தரவில்லை என உள்ளே சிக்கியோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

கண்ணீர் மல்க தனது குடும்பத்தினரின் உயிர் கிடைக்குமா? உடலானது கிடைக்குமா? என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.