டைவர்ஸ் வாங்கின கையோடு.. வீட்டை விட்டு வெளியேறிய நிலா.! அய்யனார் துணை குடும்பம் அதிர்ச்சி.!
மரத்தில் ஏறி விளையாடிய 9 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி: கிளையில் இருந்து மின்கம்பியை பிடித்ததால் பயங்கரம்.!
சென்னையில் உள்ள ஊத்துக்கோட்டை, முக்கரம்பாக்கம் மாம்பேடு காலனி பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரின் மனைவி பூங்கொடி. தம்பதிகளுக்கு 16 வயதுடைய நிஷா என்ற மகளும், 12 வயதுடைய நிதிசா என்ற மகளும், ஒன்பது வயதில் நித்திஷ் என்ற மகனும் இருக்கின்றனர்.
இவர்களில் சிறுவன் நித்திஷ் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனது நண்பர்களுடன் அங்குள்ள பகுதியில் விளையாடு கொண்டிருந்த நிலையில், மரத்தின் மீது அவர் ஏறி இருக்கிறார்.
மரத்தின் அருகில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வந்த நிலையில், மின்கம்பம் மரத்திற்கு அருகிலேயே இருந்துள்ளது. சிறுவன் மரத்தின் கிளையின் மீது ஏறி மின்கம்பத்திற்கு அருகே சென்றதாக தெரிய வருகிறது.
அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவன் மின்கம்பியை பிடித்து விடவே, மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.
நித்திஷ் மின் தாக்குதலுக்குள்ளாகி தூக்கி வீசப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
ஆனால், மருத்துவர் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.