பால்கனியில் இருந்து 'டாடா' காட்டிய 14 வயது சிறுவன்! அடுத்த நொடியே பிணமான கொடூரம்... சென்னையில் நடந்த பயங்கரம்...!!!



chennai-student-dies-electric-shock-tuition-centre

சென்னையை அடுத்த சித்தலாம்பாக்கத்தில் டியூஷன் முடிந்து வீட்டிற்குச் செல்ல முயன்ற 14 வயது மாணவன் உயர்மின் அழுத்த கம்பி தொட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் டியூஷன் மையத்தில் இருந்து வெளியேறியபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்த மாணவன் கணேஷ், சித்தலாம்பாக்கம் ஜெயாநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் - சரண்யா தம்பதியரின் மூத்த மகன் ஆவார். அவர் மாடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு, பத்தாம் வகுப்பிற்கான பயிற்சிக்காக ஒட்டியம்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள டியூஷன் சென்டரில் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இப்படியா நடக்கணும்! வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை! பள்ளி பேருந்தால் நொடிப்பொழுத்தில் நடந்த துயரம்!

பால்கனியில் இருந்து ‘டாடா’ காட்டிய போது விபத்து

நேற்று மாலை வழக்கம்போல் டியூஷன் முடிந்து கட்டிடத்தின் படிக்கட்டில் கீழே இறங்கிய கணேஷ், அங்கிருந்த பால்கனியில் நின்றபடி சாலையில் சென்ற ஒருவருக்கு கையை அசைத்து ‘டாடா’ காட்டியுள்ளார். அப்போது, பால்கனியை ஒட்டியபடி மிக அருகில் சென்றிருந்த உயர்மின் அழுத்த மின்கம்பி மீது அவரது கை எதிர்பாராதவிதமாக பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அடுத்த நொடியில் மாணவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. கடுமையாக தாக்கிய மின்சார அதிர்வால் கணேஷ் பால்கனியில் இருந்து கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மின் இணைப்பு துண்டித்து மீட்பு நடவடிக்கை

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரும்பாக்கம் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், முதலில் அந்தப் பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மாணவனின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. டியூஷன் மையம் அமைந்திருந்த கட்டிடத்தின் அருகே பாதுகாப்பு வசதிகள் முறையாக இருந்ததா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அலட்சியமே காரணமா?

பொதுவாக கட்டிடங்களுக்கு அருகே செல்லும் மின்கம்பிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக PVC குழாய்கள் பொருத்தப்படும். ஆனால், இந்தக் கட்டிடத்தில் அத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று பெற்றோரும் உறவினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

கட்டிட உரிமையாளர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என அவர்கள் வேதனை தெரிவித்தனர். கோடை விடுமுறையில் டியூஷனுக்குச் சென்ற மகன் திரும்பி வராமல் போனதை கண்டு பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுத காட்சி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

 

இதையும் படிங்க: அதிர்ச்சி! விடுதியில் 19 வயது மருத்துவ மாணவி மர்மமான முறையில் மரணம்! தீவிர விசாரணையில் போலீஸ்.!