உபர் ஆட்டோவில் பயணித்த மாணவிக்கு பாலியல் தொல்லை; காமக்கொடூர ஓட்டுநர் கைது..!Chennai Semmanjeri girl sexual Harrasment Uber Auto Driver Arrest

 

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி, நேற்று முன்தினம் உபர் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, ஆட்டோ ஓட்டுநராக வந்தவர் பாலியல் தொல்லை கொடுக்கவே, இது குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், விசாரணைக்கு பெண் காவலரை அனுப்பாமல் ஆண் காவலரை அனுப்பி இருக்கின்றனர். மேலும், விசாரணைக்கு வந்தவர் புகாரை வாபஸ் பெரும் வகையிலேயே பேசியிருக்கிறார். 

இதனால் விரக்தியடைந்த பாதிக்கப்பட்ட பெண்மணி, ஆட்டோ ஓட்டுநரின் புகைப்படம் மற்றும் அவரின் ஆட்டோ குறித்த பதிவை தனது சமூக பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

இதனையடுத்து, பாலில் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.