தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கை, கால், தலை இல்லாமல் ஏரியில் மிதந்த சடலம்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!
சென்னையில் உள்ள சிறுகளத்தூர், செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் நேற்று காலை நேரத்தில் ஒரு சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் தலை மற்றும் கை, கால்கள் இல்லாத நிலையில், 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் ஒன்று மிதந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் யார்?, அவர் கை, கால்கள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு ஏரியில் உடல் வீசப்பட்டதா? அல்லது கொலை செய்யப்பட்ட பின்னர் ஏரியில் வீசிய சடலத்தை மீன்கள் கடித்து சேதப்படுத்தினதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.