தமிழகம்

தமிழகமே அதிர்ச்சி.. 13 வயது சிறுமி 4 சிறார் கும்பலால்.. பதறவைக்கும் சம்பவம்.. நட்பாக பழகி வீடுபுகுந்து பயங்கரம்.!

Summary:

தமிழகமே அதிர்ச்சி.. 13 வயது சிறுமி 4 சிறார் கும்பலால்.. பதறவைக்கும் சம்பவம்.. நட்பாக பழகி வீடுபுகுந்து பயங்கரம்.!

சென்னையில் உள்ள காசிமேட்டில் வசித்து வரும் தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில், மூத்த மகளுக்கு 15 வயதும், இரண்டாவது மகளுக்கு 13 வயதும், மூன்றாவது மகளுக்கு 11 வயதும் ஆகின்றது. இரண்டாவது மகளான 13 வயது சிறுமி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்நிலையில், சிறுமி பள்ளியில் பயின்று வரும் 4 மாணவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். மாணவர்களும் மாணவியின் வீட்டிற்கு சென்று படித்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியின் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து சென்றவர்கள், கதவை பூட்டி மாணவியின் ஆடையை களைந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கின்றனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பதறியபடி கூச்சலிட்ட நிலையில், அந்த காமுகன்கள் இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என்று மிரட்டி இருக்கின்றனர். பயந்துபோன சிறுமியோ தனக்கு நேர்ந்த துயரம் குறித்து வெளியே கூறாமல் இருந்துள்ளார். 

இந்த துயரம் குறித்து சில நாட்கள் கழித்து சிறுமி தங்கையிடம் தெரிவிக்கவே, அவர் தாயாருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி 4 சிறார்களை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


Advertisement