உள்மாவட்டங்களில் அதிகரிக்கும் வெயில் - சென்னை வானிலை ஆய்வு மையம்.!

உள்மாவட்டங்களில் அதிகரிக்கும் வெயில் - சென்னை வானிலை ஆய்வு மையம்.!


Chennai RMC Announce Heat Wave on TN Districts

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட ஒரு டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும். 

மத்திய பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16 ஆம் தேதியில் தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மாதிரி முதல் மிதமான மழை பெய்யும். 

17 ஆம் தேதி தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18 ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

chennai

அதிகபட்ச வெப்பநிலையாக இன்று மற்றும் நாளை தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட ஒரு டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாகலாம். 

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியசும் பதிவு ஆகலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.