20 ஆம் தேதி வரை தமிழகத்தில் எங்கெங்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.!

20 ஆம் தேதி வரை தமிழகத்தில் எங்கெங்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.!



chennai-regional-meteorological-center-announcement

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " ஜனவரி 16, 17 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யலாம். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

18 ஆம் தேதியை பொருத்தவரையில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 19 ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதிகளைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். 

chennai

தலைநகர் சென்னையை பொருத்தவரையில் வரும் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். 

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் விருதுநகர் மாவட்டம் பிலவக்களில் 5 சென்டி மீட்டர் மழையும், தென்காசியில் 4 சென்டி மீட்டர் மழையும், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 3 சென்டி மீட்டர் மழையும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 2 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.