சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து.‌.. மீட்பு பணிகள் தீவிரம்...!



chennai-rajiv-gandhi-hospital-fire-accident

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளன. இந்தநிலையில், சர்ஜிகல் பிளாக்கர் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்திருக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில், நோயாளிகள் அவதிக்குள்ளாயினர். 

இருப்பினும் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அறுவை சிகிச்சை அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீ விபத்தில் பலத்த சேதமடைந்துள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆக்சிஜன் சிலிண்டர்களை வெளியே எடுத்து செல்வதற்காக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

chennai

அத்துடன் விபத்து குறித்த தகவல் தெரிந்தவுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் இருவரும் உடனடியாக விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 

மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில், தீ விபத்து நடந்த இடத்தில் 3 சிலிண்டர்கள் வெடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.