என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
குப்பையில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் பிஞ்சு மரணம்; காதல் ஜோடி மீது கொலை வழக்குப்பதிவு.!

சென்னையில் உள்ள பூந்தமல்லி பகுதியில், தனியார் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கியிருந்த இளம்பெண், அவரது காதலருடன் நெருங்கி பழகிய காரணத்தால் கர்ப்பமாகி இருக்கிறார்.
இதனால் பெண்மணி குழந்தையும் பெற்றெடுத்த நிலையில், குழந்தையை வளர்க்க விரும்பும் இல்லாதவர்கள், பச்சிளம் பிஞ்சை குப்பை தொட்டியில் விடுதி வளாகத்திலேயே வீசிச்சென்றனர்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள், குழந்தையை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். காவல் துறையினருக்கும் தகவல் தெரியவந்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட தம்பதி குழந்தையை தாங்களே வீசி சென்றோம் என முன்ஜாமீன் பெற்றது. இந்நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், காவல் துறையினர் காதல் ஜோடிக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.