இளம்பெண்கள் டார்கெட்.. கல்லூரி நண்பர்களை நம்பி ஏமாறாதீங்க.. மாதாமாதம் இஎம்ஐ கட்டி கதறும் காதலி.! முழு விபரம் உள்ளே.!Chennai Mystery Gang Miss use Friendship to Get Loan and Cheating 

 

காதலுக்கு கண்கள் இல்லை என்பது பல இடங்களில் அப்பட்டமாக நிரூபணம் ஆவதால், பலரும் காதலின் துரோக வலிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கல்லூரி நண்பன், காதலன் என துரோகத்தின் வலியை சந்தித்தோருக்கு மட்டுமே கீழ்காணும் செய்தியின் வலியும் புரியும்.

சென்னையை சேர்ந்த பெண்மணி மெர்சி. பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன். இவர்கள் இருவரும் கல்லூரி கால தோழர்கள் ஆவார்கள். இருவரும் கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக தனது காதலியிடம், தனக்கு கடன் தொல்லை இருக்கிறது. கடன் கொடுத்தவர்கள் பிரச்சனை செய்கிறார்கள். ரூ.8 இலட்சம் பணம் இருந்தால் கடனை அடைத்துவிட்டு, உன்னையே திருமணம் செய்துகொள்வேன் என கூறி இருக்கிறார். 

இதனை அப்பாவித்தனமாக நம்பிய மெர்சியும், எம்.என்.சி நிறுவனத்தில் நல்ல வேலையில் பணியாற்றி வந்ததால் தனது சொந்த முயற்சியில் கிரெடிட் கார்டு, தனிநபர் லோன் என காதலனுக்கு ரூ.8 இலட்சம் ஏற்பாடு செய்து உடனடியாக கொடுத்துள்ளார். 

பணத்தை பெற்றுக்கொண்ட சதாம் உசேனோ, சில மாதங்கள் திருமணத்தை தள்ளிப்போடலாம் என பேசிவிட்டு, பின் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. உன்னை என்னால் திருமணம் செய்ய இயலாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். 

chennai

இதனால் பதறிப்போன பெண்மணி மேற்படி பேசும்போது, சதாம் உசேன் தரப்பு வழக்கறிஞர் நீங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார். இதனையடுத்து, ஒரு ஆண்டாக கெஞ்சி பார்த்த பெண்மணி, தற்போது காவல் நிலையத்தில் காதலனுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். 

காதலன் குறித்து விசாரிக்கும்போது, அவர் தன்னைப்போல பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் என்ற அதிர்ச்சி செய்தியும் தெரியவந்துள்ளது. இவ்வாறாக பெறப்பட்ட பணத்தை வைத்து கார், உயர்ரக செல்போன் என ஆடம்பர வாழ்க்கையை சதாம் உசேன் வாழ்வதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இவ்வாறான ஏமாற்றுப்பேர்வழிகளை காவல் துறையினர் தகுந்த முறையில் விசாரித்து, ஆதாரங்களை திரட்டி சிறையில் அடைப்பது மட்டுமே அவருக்கான தண்டனையாகிவிடாது. சட்டங்களும் கடுமையாக்கப்பட வேண்டும், காதலராகவே இருப்பினும் அவரை நம்பி பெரிய அளவிலான பணத்தை கொடுக்கும் முன் யோசனை செய்ய வேண்டும் அல்லது அவர் கூறுவது உண்மையா? என ஆராய்ந்து செயல்படுவது நல்லது.