தமிழகம் சமூகம்

3 நாட்களாகியும் கிடைக்காத சந்தியாவின் தலை; தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்.!

Summary:

chennai murder case - cinima directer and his wife

சில நாட்களாக அணைத்து பத்திரிகைகள், இணையதளங்களில் உலாவரும் செய்தி நடிகை சந்தியா கொலைவழக்கு. கட்டிய கணவனே தனது மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசிய சமபவம் அனைவரையும் அதிர்ச்சியிலும், பயத்திலும் ஆழ்த்தியுள்ளது. துணை நடிகையாக இருந்த சந்தியாவை அவரது கணவர் பாலகிருஷ்ணன் வெட்டி கொன்றார்.

பாலகிருஷ்ணன் சந்தியாவை கொன்றவிதம் குறித்து அனைவர் மனதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு சைக்கோ நபரால் மட்டுமே செய்யக்கூடிய அளவிற்கு இவளோ கொடூரமாக ஒரு இயக்குனர் நடந்தது எப்படி? எப்படி தனது மனைவியை இவளவு கொடூரமாக கொலைசெய்தார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வந்த போலீசார், பாலகிருஷ்ணனைக் கைது செய்துள்ளனர். சந்தியாவின் ஒரு கை, 2 கால்கள் அடங்கிய பார்சல் பெருங்குடி குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்டது. 

இந்நிலையில் பாலகிருஷ்ணன் அளித்த தகவலின்படி, ஜாபர்கான்பேட்டை பாலத்துக்கு அடியில் வீசப்பட்டிருந்த சந்தியாவின் இடுப்பிலிருந்து தொடை வரையிலான பகுதியைப் போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில் அவரது தலை, இடது கை, உடல் பகுதிகள் இன்னும் கிடைக்கவில்லை.

இவற்றைத் தேடும் பணி பெருங்குடி குப்பை கிடங்கில், கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஊழியர்கள், பொக்லைன் எந்திரங்கள், போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எந்தவித உடல் பாகங்களும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் குப்பைக் கிடங்கில் பருந்துகளும், 50க்கு மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் சந்தியாவின் உடலைத் தின்றிருக்கலாம் அல்லது வேறு எங்காவது இழுத்துச் சென்று போட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 


Advertisement