தேர்வு முடிவை தெரிந்துகொள்ளாமலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்; சென்னையில் சோகம்.!Chennai Maduravoyal Student Died Accident 


தேர்வெழுதிய மாணவர் தனது மதிப்பெண்ணை தெரிந்துகொள்ளும் முன்பே விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வெளியான பொதுத்தேர்வு முடிவுகள்:

சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. இவர் மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள சென்றுள்ளார். 

இதையும் படிங்க: சென்னை வாகன ஓட்டிகளுக்கு உற்சாக செய்தி; மாநகர் முழுவதும் பசுமைநிற பந்தல்.!

விபத்தில் சிக்கிய மாணவர்:

இருசக்கர வாகனத்தில் மதுரவாயல் பாலத்தில் சென்றபோது, பழத்தின் கீழே லாரி ஒன்று இவரின் இருசக்கர வானத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் மாணவர் ஜீவா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், அங்கிருந்து வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றார்.

முடிவை தெரிந்துகொள்ளும் முன் பரிதாப பலி:

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், ஜீவா தனது மதிப்பெண்ணை அறிந்துகொள்ள சென்றபோது விபத்தில் சிக்கி மரணமடைந்த சோகம் நடந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: #Breaking: கழுத்தில் சிக்கிய கேபிள்.. பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய இளைஞர்..!