தமிழகம்

சென்னையில் தகாத உறவை தட்டிக்கேட்ட தாய்; மகளால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்.!

Summary:

chennai kallakkathal daughter fire his mother

சென்னையில் தகாத உறவை தட்டிக்கேட்ட தாயை, மகளே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் சானடோரியம் அருகில் உள்ள துர்கா நகர் பகுதியில் பூபதி (60) இவருடைய மகள் நந்தினி(27), ஆகியோர் வசித்து வருகின்றனர். நந்தினிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நந்தினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (49) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது பூபதிக்கு தெரியவர, நந்தினியை பலமுறை கண்டித்துள்ளார்.

Related image

ஒரு கட்டத்தில் கோபமடைந்த நந்தினி கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இறந்த தனது தாயை அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு தனது தாய் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார்.

இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில், மகள் நந்தினியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த தகவலின் படி, முருகன் உடனான தகாத உறவுக்கு பூபதி இடையூறாக இருந்ததால், முருகனின் ஆலோசனைப்படி பூபதியை மண்ணெண்ணையை ஊற்றி கொலை செய்ததாக நந்தினி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, நந்தினி மற்றும் முருகன் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது பிரிவு எண் 302ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement