மிகவும் சுவாரசியமான சென்னையின் வரலாறு! சென்னை இப்படித்தான் தோன்றியதா?



Chennai history in tamil

சென்னை உருவாகி இன்றுடன் 380 ஆண்டுகள் ஆகிறது. ஒவொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சென்னை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இன்று சென்னையில் குடியிருக்கும் நம்மில் பலருக்கும் சென்னை எப்படி உருவானது அதன் வரலாறு என்ன என்பது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பதிவில் சென்னையின் வரலாறு பற்றி பார்க்கலாம் வாங்க.

ஆந்திரத்தில் நெல்லூர் அருகே, ஆர்மகாம் என்ற சிற்றூரில் ஆங்கிலேயர்கள் தங்கள் வணிக முகாமை அமைத்திருந்தனர். அங்கிருந்த ஆட்சியாளர்களின் கெடுபிடியால் அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல திட்டமிட்ட அவர்கள் சென்னை கடற்கரையின் மணல் மேட்டுப்பகுதியை கண்டுபிடித்தனர்.

Madras day

மிகப்பெரிய மணல் திட்டான அந்த பகுதியை அதன் உரிமையாளர்கள் தாமல் சென்னப்பநாயக்கரின் மகன்களான ஐயப்ப நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர் ஆகியோரிடம் இருந்து, 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி, பிரான்சிஸ் டே விலைக்கு வாங்கினார். அன்றைய தினமே சென்னையின் உதய நாளாக கணக்கிடப்படுகிறது.

அதன்பின்னர் பிரான்சிஸ் டே சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையினை காட்டினார். அதனை சுற்றி மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், திருவான்மியூர், திருவொற்றியூர் என்று சிறு, சிறு கிராமங்களாக உதயமாகி பின்னர் நகரமாக வளர்ச்சி பெற்றது.

Madras day

அந்த பகுதிக்கு மதராசப்பட்டணம் என்றும், தெற்கே இருந்த பகுதிகள் சென்னப்பட்டணம் என்றும் பிரிக்கப்பட்டது. பின்னர் இரண்டையும் ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து மதராசபட்டினம் என பெயர் மாற்றம் செய்தனர்.