துபாய், சவூதியில் விபச்சாரத்திற்கு கடத்தப்படும் இளம் தமிழ்ப்பெண்கள்.. 24 வயது இளம்பெண்பரபரப்பு பேட்டி..! அம்பலமான உண்மை.!!chennai-girl-forced-prostitution-saudi-arabia-later-she

சென்னையில் அனாதை என்று கூறி குடும்பத்தை தத்தெடுத்து, அவர்களுடன் ஆறு மாதங்களுக்கும் மேலாக வாழ்ந்து இளைஞர், தனது குடும்பத்தில் கணவரை இழந்து வாழ்ந்து வரும் அக்கா நிஷாவிடம் ஆசை வார்த்தை கூறி சவுதிக்கு அனுப்பி வைத்து, அவர் பல இன்னல்களை கடந்து சென்னை வந்து பல பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். பெண்ணின் வாழ்க்கையில் நடந்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருச்சியை சேர்ந்த பெண்மணி நிஷா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நிஷாவின் கணவர் 2019 ல் விபத்தில் உயிரிழந்துவிட்டார். இதனால் சென்னைக்கு வந்த நிஷா, தனது குடும்பத்தை பல வேலைகள் செய்து கவனித்து வந்துள்ளார். அப்போது, இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்மணி, சினிமா நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் நல்ல வருமானம் வரும் என்று கூறியுள்ளார். 

கடந்த ஒரு ஆண்டுகளாக நிஷா சினிமாவில் நடனம் ஆடுபவராக இருந்து வந்த நிலையில், பக்கத்து வீட்டின் பெண்ணின் வளர்ப்பு சகோதரர் ஜமூக் அபூர்கான், நிஷாவுடன் தம்பி போல பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் நடனம் ஆடும் இடத்தில் பழக்கப்பட்ட நிலையில், அபூருக்கு பெற்றோர் இல்லையாம். ஆதலால் அவரை பெண்ணின் குடும்பத்தினர் தத்தெடுத்துள்ளனர்.

chennai

இவர் நிஷாவிடம் சவூதியில் நடன நிகழ்ச்சிக்கு வேலைக்கு சென்றால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று கூறி 2 மாதங்களுக்கும் மேலாக மூளைச்சலவை செய்துள்ளார். 2 மாதமாக தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியும் அபூர் விடவில்லை. குடும்ப சூழ்நிலை, குழந்தைகள் என்று பல்வேறு காரணங்களை கூறி நிஷாவிடம் சம்மதம் வாங்கியுள்ளார். 

நிஷாவை சவுதிக்கு அனுப்புவதில் மற்றொரு பிரச்சனையாக அவரின் பெயர் மாற்றங்கள் இருக்க அதனையும் சரி செய்த அபூர் நிஷாவை சவூதி அனுப்பி வைத்துள்ளார். அங்கு நடன வேலை என்று சென்ற நிஷாவுக்கு பெறும் அதிர்ச்சியாக பப்பில் ஆபாச நடனம், பாலியல் தொழில் போன்றவை நடந்தது அம்பலமானது. 

இதனால் அதிர்ந்துபோன அவர் தன்னை சொந்த ஊரில் கொண்டு விட்டுவிடும்படி கதறவே, அதனை கண்டுகொள்ளாதவர்கள் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். நிஷாவை நெஞ்சில் மிதித்து, அடித்து உதைத்து இருக்கின்றனர். இத்தனையும் செய்தது அவரைப்போன்ற பெண் என்பதுதான் இங்கு அதிர்ச்சியான விஷயம். 

chennai

இறுதியாக அவர் மீண்டும் அபூருக்கு தொடர்பு கொண்டு பேசும்போது, அவனோ தனது அக்கா என்ற நிலையில் இருந்து மாறி பெண்ணிடம் வெற்று பேப்பரில் 2 இலட்சம் கடன் வாங்கியதாக எழுதிக்கொண்டு, அந்த கடனை நான் செலுத்தவேண்டும் என்று நிஷா கூறுவது போல பேசி ஆடியோ அனுப்பிய பின்னர் தமிழகத்திற்கு அனுப்பி வைக்க ஒத்துழைத்துள்ளான். 

சென்னை விமான நிலையத்திற்கு பெண் வந்தால் அவரை கடத்த 6 பேர் அடியாட்களுடன் அபூர் தயாராக இருக்க, சுதாரித்த பெண்மணி முன்னதாகவே அண்ணனை விமான நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் வெளியே வந்தவர்கள், அரசு பேருந்தை இடைமறித்து திருச்சி நோக்கி பயணம் செய்துள்ளனர். 

இவர் சவூதியில் இருக்கும்போது அவரைப்போல பாதிக்கப்பட்டு, வேறு வழியில்லை என்ற நிலையில் இருக்கும் பெண்களை சந்தித்தாகவும், குறிப்பாக தமிழ் பெண்களை குறிவைத்து இக்கும்பல் நூதன மோசடி மற்றும் கடத்தல் செயலில் ஈடுபடுவதாகவும் தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக பெண் அளித்த பரபரப்பு பேட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளிநாட்டு வேலை என ஆணையும், பெண்ணையும் ஆசைவார்த்தை கூறி அழைத்து செல்லும் பலரும் இங்கு உல்லாசமாக சுற்றிவரும் நிலையில், அவர்களின் வலையில் சிக்கும் ஒவ்வொருவரும் பெரும் சோகத்தையே எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்த கும்பல் எழுதிவாங்கிய விஷயங்களை வைத்து பேசும் போது, இக்கும்பல் கோவையை சேர்ந்தோரின் நட்பு பட்டியலில் இருந்துகொண்டு இயங்குவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் பல உண்மைகள் வெளியாகும்.