குடிக்க ரூ.10 பணம் தர மறுத்த இளைஞர் தலையில் கல்லைப்போட்டு கொலை; பதறவைக்கும் சம்பவம்.!Chennai Egmore Man Killed 

 

சென்னை எழும்பூர் நெட்டுக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் வயது ரஞ்சித் (வயது 35). இவர் மீனவராக பணியாற்றி வருகிறார். மனைவி மற்றும் மகன்களை பிரிந்து தனியாக இருக்கிறார். 

இந்நிலையில், இவர் நேற்று அங்குள்ள கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

chennai

இதுகுறித்து தகவல் அறிந்த எண்ணூர் காவல் துறையினர், ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் மதுபோதையில் இருந்த கோவிந்தராஜ் ரஞ்சித்திடம் கூடுதலாக மது அருந்த ரூ.10 கேட்டுள்ளார். 

ரஞ்சித் பணம் கொடுக்க மறுப்பு தெரிவிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். ஆத்திரம் தீராத கோவிந்தராஜ், கடற்கரையோரம் உறங்கிய ரஞ்சித்தின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.