கூலித்தொழிலாளிக்கு எமனான அந்த ஒரு விஷயம்.. கோயிலில் நடந்த கொடூர சம்பவம்.!



Chennai Crime: Daily Wage Worker Killed with Stone While Sleeping at Beach Temple

கடற்கரை கோயிலில் உறங்கிக்கொண்டிருந்த தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பயங்கரம் சென்னையில் நடந்துள்ளது.

பேசிக்கொண்டு இருந்தனர்:

சென்னையில் உள்ள திருவொற்றியூர், ஒண்டிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 35). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, நேற்று முன்தினம் மாலை நேரத்தில், கடற்கரை பகுதியில் சீனிவாசன் தனது நண்பருடன் பேசியுள்ளார். 

இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!

ஆபாச செய்கை:

அந்த சமயத்தில், மல்லிகாபுரம் பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் (வயது 20) போதையில் வந்து சீனிவாசனிடம் தகராறு செய்துள்ளார். மேலும், தனது ஆடையை களைந்து அரைநிர்வாணமாக செய்கை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் ஆகாஷை அடித்து அங்கிருந்து விரட்டி இருக்கிறார்.

chennai

கல் தலையில் போட்டு கொலை:

பின் சீனிவாசன், அவரின் நண்பர் ஆனந்தன் சென்றுவிட்டனர். பின் மதுபானம் அருந்திய சீனிவாசன் இரவு 11 மணியளவில் கடற்கரை கோயிலில் உறங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு கோபத்துடன் வந்த ஆகாஷ், "என்னை அடித்தவன் தானே நீ" என கத்தியபடி, பெரிய பாறாங்கல்லை எடுத்து சீனிவாசனின் தலையில் போட்டுள்ளார்.

காவல்துறை விசாரணை:

இதனை நேரில் பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தமிட, பதற்றத்தில் தப்ப முயன்றவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின் இதுகுறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் காவல்துறையினர், சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மக்கள் தாக்கியதில் காயமடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: என் மேல சந்தேகமா? தலைநசுங்கி உயிரிழந்த கணவன்.. மனைவி செய்த வெறித்தன சம்பவம்!