தமிழகம் லைப் ஸ்டைல் Deepavali News

ரூ.1000-க்கு மேல் மது குடித்தால் எல்இடி டிவி பரிசு! சர்ச்சையை ஏற்படுத்திய ஹோட்டல்!

Summary:

Chennai bar announced lcd tv for drinkers

சென்னை: ஆயிரம் ரூபாய்க்கு மேல் மது குடிப்பவர்களுக்கு குழுக்கள் முறையில் எல்இடி டிவி பரிசு வழங்கப்படும் என அறிவித்த பார் மேலாளர் மற்றும் பார் உரிமையாளரின் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுவாக தீபாவளி, பொங்கல் அல்லது ஏதாவது விசேஷம் என்றாலே மது அருந்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிடும். இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த வெள்ளிக்கிழமை முதலே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மது அருந்துபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மது அருந்தினால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு எல்இடி டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் ஆகியன பரிசாக வழங்கப்படும் என பேனர் வைக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த குடிகாரர்கள் சம்மந்தபட்ட கடைக்கு படையெடுக்க தொடங்கினர். மேலும் அவர்கள் சொன்ன தொகைக்கு குடித்துவிட்டு அங்கு இருந்த பெட்டியில் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதி போட்டுவிட்டு வந்துள்ளனர்.

சற்று நேரத்தில் கடையில் கூட்டம் அலைமோதியதால் குடிகாரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த போலீசார் பேனர் வைத்ததாக பார் மேலாளர் வின்சென்ட் ராஜ், பார் உரிமையாளரின் உதவியாளர் ரியாஸ் முகமது ஆகியோர் கைது செய்தனர்.


Advertisement