சென்னையை அதிரவைத்த இரட்டைக்கொலை விவகாரத்தில் பரபரப்பு தகவல்.. நண்பன் துரோகியானதால் பயங்கரம்.!

சென்னையை அதிரவைத்த இரட்டைக்கொலை விவகாரத்தில் பரபரப்பு தகவல்.. நண்பன் துரோகியானதால் பயங்கரம்.!


Chennai Avadi Ground 2 Man Killed by Gang Police Investigation

ஆவடி அருகே நடந்த இரட்டைக்கொலை விவகாரத்தில், காவல் துறையினரின் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொலை திட்டம் எதிராளிக்கு தெரியவந்து நடந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஆவடி பேருந்து நிலையம் பின்புறம் ஓ.சி.எப் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் நேற்று நள்ளிரவில் 2 வாலிபர்கள் வெட்டிபடுகொலை செய்யப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக ஆவடி டேங்க் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலையானது ஆவடி மசூதி தெருவை சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளி அரசு என்ற அசாருதீன் (வயது 30), ஆவடி கவுரிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுந்தர் (வயது 30) என்பது உறுதியானது. 

இருவரின் சடலத்தையும் கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். விசாரணையில், ஆவடி கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (வயது 30), ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஜெகன் (வயது 30) என்பவரும், கடந்த 2019 ஆம் வருடம் வெவ்வேறு கொலை வழக்கில் சிறைக்கு சென்று நட்பாகி இருக்கின்றனர். ஜாமினில் வெளியே வந்த பின்னரும் இவர்களுக்குள் நட்பு தொடர்ந்து வந்துள்ளது.

chennai

இவர்கள் இருவரும் ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா வியாபாரம் செய்து வந்த நிலையில், ஜெகன் அவ்வப்போது மணிகண்டனின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது, ஜெகனுக்கு மணிகண்டனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, மணிகண்டனின் மனைவியை ஜெகன் தனது இல்லத்திற்கு அழைத்து சென்று குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இதனால் மணிகண்டன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

மனைவியை அபகரித்து சென்ற விவகாரத்தில் மணிகண்டன் - ஜெகன் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த வாரத்தில் ஜெகன் நண்பர்களுடன் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மணிகண்டனை தாக்கி இருக்கிறார். இந்த தாக்குதல் சம்பவத்தால் மணிகண்டன் ஜெகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜெகன் நண்பர்கள் அசாருதின், சுந்தர் உட்பட சிலருடன் ஓ.சி.எப் மைதானத்தில் மதுபானம் அருந்தியுள்ளனர். 

chennai

கொலை தொடர்பான தகவல் எப்படியோ மணிகண்டனுக்கு சென்றுவிட, முந்திக்கொண்டு செயல்பட்ட மணிகண்டன் கூட்டாளிகள் 10 பேருடன் ஜெகனை கொலை செய்ய மைதானத்திற்கு வந்துள்ளார். எதிர்தரப்பில் ஆட்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் மணிகண்டன் மற்றும் பிறர் தப்பி சென்றுவிட, 10 பேர் கும்பலிடம் அசாருதீன், சுந்தர் சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரையும் மணிகண்டன் தரப்பு சரமாரியாக வெட்டி கொலை செய்து, முகத்தை சிதைத்து தப்பி சென்றுள்ளது. 

இதனையடுத்து, ஆவடி மாநகர காவல் ஆணையர் சாந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் களமிறங்கிய தனிப்படை காவல் துறையினர், கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கொலையான அசாருதீனுக்கு கௌரி என்ற 9 மாத கர்ப்பிணி மனைவி இருக்கிறார். சுந்தருக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர்.