34 இலட்சம் மொட்டை.. குரலுக்கு மயங்கி மகுடி பாம்பு போல ஆடிய போலீசுக்கு, ஆப்படித்த பெண்மணி.!

34 இலட்சம் மொட்டை.. குரலுக்கு மயங்கி மகுடி பாம்பு போல ஆடிய போலீசுக்கு, ஆப்படித்த பெண்மணி.!



Chennai Avadi Girl Arrested by Police Cheating Love Trap for Money

முகநூல் வழியாக காவல் அதிகாரி, அவரின் பெரியப்பா மகனை காதல் வலையில் வீழ்த்தி, ரூ.34 இலட்சம் பறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில், மூலக்கரை பகுதியை சார்ந்தவர் பாரதிராஜா (வயது 25). இவர் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11 ஆவது பட்டாலியன் பிரிவில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதமாக சென்னை திருவெற்றியூர் கடலோர காவல் படையில் அவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் முதலாகவே ஆவடி பாரதிதாசன் தெரு பகுதியை சார்ந்த ஐஸ்வர்யா என்ற 26 வயது பெண்மணி முகநூலில் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் மருத்துவ மாணவி என்று கூறி பாரதிராஜாவிடம் பேசி வந்த நிலையில், நான் உங்களை திருமணம் செய்ய விரும்புவதாகவும் காதல் வலை வீசி ஆசையாக பேசியுள்ளார்.

Sivaganga

இவரது மயக்கும் பேச்சுக்குரலுக்கு அடிமையாகி, மகுடிப்பாம்பு போல பாரதிராஜாவும் காதல் மொழிகள் பேசி வந்துள்ளார். இந்நிலையில், தனது படிப்பு செலவுக்கு பணம் தேவை என்றும், இன்னும் பல காரணங்கள் தெரிவித்தும் ரூ.14 இலட்சம் வரை ஐஸ்வர்யா பாரதிராஜாவிடம் இருந்து பெற்றுள்ளார். நேரடியாக பெற்றால் சந்தேகம் வந்துவிடும் என்பதால் தனது தந்தை பழனி, தாய் லதா வங்கிக்கணக்கு பணம் அனுப்ப வைத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், பாரதிராஜாவின் பெரியப்பா மகன் மகேந்திரன் என்பவருக்கு மற்றொரு போலி முகநூல் கணக்கு வாயிலாக ஐஸ்வர்யா அறிமுகமாகி பழகி, அவரிடமும் திருமணம் செய்துகொள்வதாகவும், காதலிப்பதாகவும் தெரிவித்து ரூ.20 இலட்சம் வரை பணம் பெற்று ஏமாற்றி இருக்கிறார். இந்நிலையில், திடீரென கடந்த 1 மாதமாக பாரதிராஜாவிடம் ஐஸ்வர்யா பேசாமல் இருந்துள்ளார். 

Sivaganga

இதனால் அதிர்ச்சியடைந்து சுதாரித்துக்கொண்ட பாரதிராஜா, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிடவே, ஆவடி குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, நேற்று மாலை ஐஸ்வர்யாவை கைது செய்தனர். 

இவரிடம் நடந்த விசாரணையில், ஐஸ்வர்யா ஆவடி ஆனந்தா நகரில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருவதும், முகநூலில் பாரதிராஜா மற்றும் அவரது பெரியப்பா மகன் மகேந்திரன் ஆகியோரை ஏமாற்றி ரூ.34 இலட்சம் பணம் பறித்தும் அம்பலமானது. அவரிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.