தமிழகம்

பஸ்டாண்டை பதறவைத்த பள்ளி மாணவிகள்.. இரண்டு குழுவாக பிரிந்து சண்டை.!

Summary:

பஸ்டாண்டை பதறவைத்த பள்ளி மாணவிகள்.. இரண்டு குழுவாக பிரிந்து சண்டை.!

ஆவடி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் இரண்டு குழுவாக பிரிந்து தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதில் இருந்து பல இடங்களில் மாணவர்களின் மோதல் தொடர்பான சம்பவமும் நடந்து வருகிறது. மேலும், மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டு, ஜன்னலை பிடித்து தொங்கியவாறு பயணிக்கும் பதைபதைப்பு விடியோவும், இரயிலில் சாகசம் செய்வதாக நினைத்து செய்யும் சர்ச்சை சம்பவமும் என பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு, பொது இடங்களில் சண்டையில் ஈடுபடுவதாக கூறப்படும் நிலையில், ஆவடி பேருந்து பணிமனையில் பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள் 2 பிரிவாக பிரிந்து மாணவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் சண்டையில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. 

ஆவடி பேருந்து நிலையத்தில் சண்டை சம்பவம் நடந்த நிலையில், மாணவிகளை பொதுமக்கள் சமாதானம் செய்தும் பலனில்லை. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. பலரும் இதற்கு தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். 


Advertisement