இட்லி துணிக்காக காதைகடித்த மேற்பார்வையாளர்... கதறித்துடித்த பெண்மணி..! கட்டிப்பிடித்து பரபரப்பு சம்பவம்..!chennai amma unavagam servants fight

அம்மா உணவக ஊழியரின் காதை, மேற்பார்வையாளர் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள சாலிகிராமம் வி.வி கோவில் தெருவில் தமிழக அரசின் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் விருகம்பாக்கத்தை சேர்ந்த தாமரைசெல்வி என்ற பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல தனது சமையல் வேலையில் அவர் ஈடுபட்டிருந்த போது, உணவக மேற்பார்வையாளர் ராதிகா 'இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை?' என்று தாமரை செல்வியை கண்டித்துள்ளார்.

chennai

இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால், இருவரும் கட்டிப்பிடித்து தரையில் தாறுமாறாக புரண்டுள்ளனர். அப்போது ஆவேசமடைந்த ராதிகா தாமரைச்செல்வியின் காதை கடித்ததாக கூறப்படுகிறது. ராதிகா கடித்ததால் காயமடைந்த தாமரைசெல்வி ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.