குடும்ப தகராறில் மனைவி அடித்து கொலை?.. கணவனின் மீது பாயும் சந்தேகம்.. களத்தில் மாதர் சங்கம்.!

குடும்ப தகராறில் மனைவி அடித்து கொலை?.. கணவனின் மீது பாயும் சந்தேகம்.. களத்தில் மாதர் சங்கம்.!


Chennai Aminjikarai Wife Mystery Death police Investigation

சென்னையில் உள்ள அமைந்தகரை பி.பி தோட்டத்தை சார்ந்தவர் கலைவேந்தன் (வயது 30). இவர் சாப்டவேர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். அம்பத்தூரை சேர்ந்த பெண்மணி பிரியதர்ஷினி (வயது 27). 

இவர்கள் இருவருக்கும் கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகளுக்கு 2 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. பிரியதர்ஷினி வழக்கறிஞருக்கு பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் பிரியதர்ஷினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து விசாரணை நடத்துகையில், திருமணம் முடிந்த சில மாதங்களுக்கு உள்ளாகவே தம்பதியிடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதற்குள்ளாக அவரின் தற்கொலையும் நடந்துள்ள நிலையில், காவல் துறையின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக மாதர் சங்கத்தின் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.