BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
இரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்தவர் அதிரடி கைது; போதையில் செய்ததாக வாக்குமூலம்.!
சென்னையில் உள்ள திருநின்றவூர் பகுதியில் செல்லும் இரயில் தண்டவாளத்தில், சம்பவத்தன்று மர்ம நபர் கட்டைகளை வைத்து இரயிலை கவிழ்க்க முயற்சித்து இருக்கிறார்.
தூரத்தில் இருந்து மரக்கட்டையை கவனித்த இரயில் ஓட்டுநர், சாதுர்யமாக செயல்பட்டு இரயிலை விரைந்து நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவித விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து இரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்துகையில், பாபு (வயது 42) என்பவர் மதுபோதையில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, பாபுவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.