நள்ளிரவு! நடு ரோடு! 19 வயது பெண்ணும், 20 வயது பெண்ணும் செய்த காரியம்! சிசிடிவி மூலம் சிக்கிய இளம் பெண்கள்!



chennai-19-years-old-girls-stealing-dio-bikes-cctv-foot

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் யாசர் அராபத். இவர் புத்தான்டு அன்று தனது டியோ இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். வெளியே நடப்பை கண்காணிப்பதற்காக யாசர் தனது வீட்டில் CCTV கேமிரா பொறுத்தியுள்ளார்.

இந்நிலையில் யாசர் வீட்டின் முன்பு வந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர் ஆள் நடமாட்டம் இருக்கிறதா என நோட்டமிட மற்றொருவர் பக்கத்து வீட்டு படிக்கட்டில் அமர்ந்துகொண்டார். ஆள் நடமாட்டம் ஏதும் இல்லை என்பதை உணர்ந்த ஒரு பெண் யாசரின் டியோ பைக்கில் ஏறி கள்ள சாவி போட்டு பைக்கை திருட முயன்றுள்ளார்.

Crime

இந்த சம்பவத்தை எதார்த்தமாக CCTV மானிட்டரில் பார்த்த யாசர் உடனடியாக கீழே இறங்கிவர யாசர் வருவதை பார்த்து அந்த பெண்கள் அங்கிருந்து தப்பித்துச்செல்ல முயன்றுள்ளனர். இரண்டு பெண்களில் ஒருவர் ஓடிவிட்ட நிலையில் ஒருபெண் மட்டும் மாட்டுக்கொண்டார்.

யாசரும், அவரது குடும்பத்தினரும் அந்த பெண்ணை வீட்டில் சிறை வைத்து விசாரித்ததில் தான் பைக்கை திருடவில்லை என அந்த பெண் சாதித்துள்ளார். உடனே இதுகுறித்து யாசர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து சிக்கிய பெண்ணின் பெண் 19 வயதான சந்தியா என்பதும் தப்பி ஓடியவர் அவரது தோழி மோனிஷா என்பதும் தெரியவந்தது.

மேலும், சந்தியா மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும், ஏற்கனவே சந்தியா மீது கஞ்சா விற்ற வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. சந்தியாவை சிறைக்கு அனுப்பிய போலீசார், தலைமறைவான அவரது தோழி மோனிஷாவை தேடி வருகின்றனர்.