சென்னையில் பெண் கொலை; கை கால்களை குப்பை கிடங்கில் வீசி எறிந்த கொடூர கணவன்.!

சென்னையில் பெண் கொலை; கை கால்களை குப்பை கிடங்கில் வீசி எறிந்த கொடூர கணவன்.!


chennai---women-murder---his-husbend-murderman

தனது மனைவியை கொலை செய்து அவரது கை, கால்களை குப்பை கிடங்கில் வீசி எறிந்த கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 21-ம் தேதி சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து லாரியில் கொண்டு செல்லப்பட்ட குப்பையில் ஒரு பெண்ணுடைய கை, கால்கள் போன்ற உறுப்புகள் மட்டும் வெட்டப்பட்டு வீசப்பட்ட நிலையில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

வீசி எறியப்பட்ட உடல் உறுப்புகளை வைத்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலையாளி யார்? என்பது தொடர்பான தீவிர விசாரணையில் பள்ளிக்கரணை போலீசார் இறங்கினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக எந்த வித தகவலும் கிடைக்காத நிலையில் சென்னையில் காணாமல் போனவர்கள் விவரம் மற்றும் குப்பை கிடங்கிற்கு அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் போலீசார் கொலையாளியை கண்டு பிடித்துள்ளனர்.

murder case

அதாவது கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கீதா என்பது தெரியவந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் திருமணமாகி சென்னை ஜாபர்கான் பேட்டையில் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணன் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.
 
சம்பவம் நிகழ்ந்த அன்று கோபத்தின் உச்சிக்கே சென்ற பாலகிருஷ்ணன் சுத்தியலால் சந்தியாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் கீழே சரிந்து விழுந்த சந்தியா இறந்துள்ளார். உடனடியாக பயத்தில் என்ன செய்வதென்று தெரியாத பாலகிருஷ்ணன் அவரது கை மற்றும் கால்களை மரம் அறுக்கும் மிஷினால்  துண்டு துண்டாக வெட்டியது தெரியவந்துள்ளது. மேலும் எஞ்சிய அவரது மற்ற உடல் பாகங்களை என்ன செய்தார் என்பது தொடர்பான தீவிர விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.