
chennai - election committy - schools leave
பிரதமா் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டம் இன்று சென்னை வண்டலூா் அருகே நடைபெறவுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் தற்சமயம் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சென்னை வண்டலூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இதனால் பாஜகவின் தோழமை கட்சிகளான அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்தும் திரளான தொண்டர்கள் வருவதாக தெரிகிறது. இதனால் சென்னை ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் வண்டலூா், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு தனியாா் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும வருவாய் துறையினரின் அறிவுறுத்தலின் போில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பள்ளி நிா்வாகிகள் தொிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement