சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு இனி தமிழ் பெயர் தான் - பிரதமர் மோடி உறுதி.!

சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு இனி தமிழ் பெயர் தான் - பிரதமர் மோடி உறுதி.!


chennai---air-port---central-railway-station---name-tam

சென்னை விமான நிலையத்தில் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் இனி தமிழிலும் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தோழமை கட்சி தலைவர்களுடன் கலந்து கொண்ட பிரமாண்ட பிரச்சாரக் கூட்டம் சென்னை வண்டலூரில் நடைபெற்றது.

chennai

இதில் பங்கேற்ற மோடி பேசுகையில், ‘தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் அமையவுள்ள பாதுகாப்பு தொழில் பூங்கா, தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும். தமிழ் நாட்டுக்கு வந்து செல்லும் விமானங்களின் அறிவிப்புகளை தமிழிலேயே அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டப்படும். தமிழர்கள் எங்கே இருந்தாலும் பிரச்னை என்றால் முதலில் நடவடிக்கை எடுப்பது பாஜக அரசு தான். யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை எனக்கு உள்ளது என்றார்.