
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டது.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், பைக் பாபு ,கெரோன்பவுல் ஆகிய 3 பேரையும், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் சிபிஐ விசாரணை வளையத்தில்இருப்பதால், இந்த வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement