கடந்த ஒரு வாரமாக நடைப்பெற்ற கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் இன்று வாபஸ்!Can water

நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு இயற்றிய சட்டத்தின்படி சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும்  குடிநீர் ஆலைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென சிவமுத்து என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதனை அடுத்து குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி என்பவர் கடந்த வாரம் முதல் காலவரையற்ற வேலை திருத்தத்தில் ஈடுப்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக நீடித்த குடிநீர் ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.  

Can water

அதாவது உரிமம் பெறாத  ஆலைகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி  சீல் வைக்கும் பணிகளை அரசு  தொடங்கியதால் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. 

இந்த நிலையில், குடிநீர் ஆலைகள் உரிமம் கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும், உரிமம் கோரி விண்ணப்பித்தால்  15 நாட்களுக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து,   கடந்த 7 நாட்களாக நீடித்த வேலை நிறுத்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக குடிநீர் ஆலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.