தமிழகம்

பதறவைத்த விபத்து: தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து கோர விபத்து!. 60-க்கு மேலானோர் படுகாயம்!.

Summary:

bus acident in pudukkottai


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு மணிபள்ளம் சாலை வழியாக சென்ற தனியார் பேருந்து ஒன்று, தலைகீழாக கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பயணித்த 60 ற்கு மேலானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி வழியாக புதுக்கோட்டைக்கு செல்லும் RST ராஜமாணிக்கம் என்ற தனியார் பேருந்து 3:30மணி அளவில் கும்மங்குளம், அரசடிபட்டி வழியாக மணிபள்ளம் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தலைகீழாக கவிழ்ந்தது. 

பேருந்தில் பயணித்த சுமார் 60 க்கும் மேலானோர் பலத்த காயம் ஏற்பட்டு, பேருந்துக்குள் இருந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்து அலறல் சத்தம் போட்டனர். இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் பேருந்தில் காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கீழே விழுந்தது. பேருந்தில் உள்ள அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் எது உயிர் சேதம் ஏற்பட்டதா என்று இதுவரை தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 பேருந்து முழுவதும் பயணிகள் நிரப்பப்பட்டு சென்ற பேருந்து தலைகீழாக விழுந்து கவிழ்ந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


Advertisement