தமிழகம்

பிரிந்து செல்லும் பசுமாட்டை ஆட்டோ பின் விரட்டிச்சென்று காளை மாடு நடத்திய பாசப் போராட்டம்..! வைரல் வீடியோ..!

Summary:

Bull run behinds the auto for cow friendship video goes viral

தன்னுடன் பழகிய பசுமாட்டை வாகனத்தில் ஏற்றிச்செல்ல விடாமல் காளை மாடு ஒன்று நடத்திய பாச போராட்டம் வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்துவந்துள்ளார். இந்நிலையில் முனியாண்டியின் பசுமாட்டும், அதே பகுதியை சேர்ந்த கோவில் காளையும் ஒன்றாக பழகிவந்துள்ளது. பசு மாடுடன் சேர்ந்து பழம், காய்கறிகள், தண்ணீர், அரிசி போன்றவற்றை சாப்பிட்டு வந்துள்ளது கோவில் காளை மாடு.

தற்போது ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி தவித்துவந்த முனியாண்டி தனது பசுமாட்டை விற்க முடிவு செய்து அதற்காக பசுமாட்டை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றியுள்ளார். இதனை பார்த்த கோவில் காளை மாடு ஆட்டோ முன் வந்து நின்று ஆட்டோவை எடுக்க விடாமல் தடுத்துள்ளது.

பின்னர் ஆட்டோவின் பின்புறம் சென்று பசுவிடம் தனது பாசத்தை காட்டுகிறது அந்த கோவில் காளை மாடு. இப்படியே 1 மணிநேரம் கடந்துவிட்டநிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை இயக்க தொடங்கியதும், ஆட்டோவின் பின்னாலையே சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்றுள்ளது அந்த காளை மாடு.

என்னதான் விலங்குகளாக இருந்தாலும் பசு மாட்டை பிரிய மறுத்து, காளை மாடு நடத்திய பாசப் போராட்டம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.


Advertisement