விழுப்புரத்தில் கொடூரம்.. கர்ப்பிணியை வயிற்றில் உதைத்து கொலை.. சந்தேக கணவனின் வெறிச்செயல்..!

விழுப்புரத்தில் கொடூரம்.. கர்ப்பிணியை வயிற்றில் உதைத்து கொலை.. சந்தேக கணவனின் வெறிச்செயல்..!


Brutality in Villupuram.. Pregnant woman was kicked in the stomach and killed.. Suspicious husband's rampage..!

விழுப்புரம் மாவட்டம் மழைவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்ல பாண்டியன் - பாரதி தம்பதியினர். பாரதிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் பாண்டியனை மறுமணம் செய்து கொண்டார். தற்போது பாரதி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் பாரதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு செல்ல பாண்டியன் பாரதியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் கர்ப்பத்திற்கு நான் காரணம் இல்லை என்று கூறி கர்ப்பத்தை கலைக்கும்படி துன்புறுத்தி உள்ளார். ஆனால் பாரதி கருவை கலைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

pregnant women

இதில் ஆத்திரமடைந்த செல்ல பாண்டியன் கர்ப்பிணி என்றும் பாராமல் பாரதியை அடிவயிற்றில் காலால் எட்டி உதைத்து கருவை கலைக்க முயற்சி செய்துள்ளார். இதில் பாரதிக்கு அதிக அளவு இரத்தப்போக்கு  ஏற்ப்படவே அக்கம் பக்கத்தினர் பாரதியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பாரதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் செல்லப்பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.