பார்க்கத்தான் ஆளு டிப் டாப்பு! ஆனா செஞ்ச வேலை இருக்கே! அடேங்கப்பா! பகீர் சம்பவம்



Brothers steal goat and sale last three years in Chennai

சென்னையில் ஆடு திருடி விற்பனை செய்துவந்த அண்ணன் - தம்பியை போலீசார் கைது செய்துள்ளன்னர்.

சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் பழனி என்பவரின் ஒரு ஆட்டுக்குட்டி சமீபத்தில் காணாமல் போய்யுள்ளது. இதனை அடுத்து தனது ஆட்டுக்குட்டியை காணவில்லை என பழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு ஆடுகளைத் திருடும் இளைஞர்கள் குறித்த ரகசியத் தகவல்கள் கிடைத்தன.

இந்நிலையில் மாதவரம், மஞ்சம்பாக்கம், ரிங் ரோடு பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த பகுதி வழியாக சொகுசு கார் ஒன்றில் வந்த இரண்டு இளைஞர்கள் சாலையில் படுத்து கிடந்த ஆடு ஒன்றினை காருக்குள் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் மீது சந்தேகப்பட்ட போலீசார் அவர்களை அழைத்துச்சென்று விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த இளைஞர்களின் பெயர் நிரஞ்சன்குமார் (36), லெனின்குமார் (32) என்பதும், இருவரும் அண்ணன் தம்பி என்பதும் தெரியவந்தது.

மேலும், அவர்களின் தந்தை லெனின்குமார் பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். இவர்களின் சொந்த தயாரிப்பில் நீதான் ராஜா என்ற படத்தை தயாரித்து அதில் அண்ணன் - தம்பி இருவரும் நடித்தும் இருக்கின்றனர். தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்யவும், படம் தயாரிக்கவும் அண்னன் தம்பி இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக இதுபோன்று ஆடுகளை திருடி சென்னையில் விற்று பணம் சம்பாதித்துவந்தது தெரியவந்துள்ளது.

மேலும், ஆடுகளை திருடுவதற்காக சொந்தமாக மார் மற்றும் மினி ஆட்டோ ஒன்றையும் இவர்கள் வாங்கியுள்ளனர். இதனை அடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைந்துள்ள போலீசார் திருட்டுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர்.