திருமணமண்டபத்தில் காத்திருந்த மணமகன்.! மணப்பெண் திடீர் மாயம்.! சுதாரித்து கொண்டு மணமகன் வீட்டார் செய்த செயல்.!

திருமணமண்டபத்தில் காத்திருந்த மணமகன்.! மணப்பெண் திடீர் மாயம்.! சுதாரித்து கொண்டு மணமகன் வீட்டார் செய்த செயல்.!



bride Missing before marriage

சென்னை செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த இலைநகருக்கும், மதுராந்தகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில் இவர்களின் திருமணம் நேற்று சென்னை நசரத்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தநிலையில் திருமண அழைப்பிதழ்களை இரு வீட்டாரும் அவர்களின் உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர்.  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற இருந்தது. இதனையடுத்து மணமகனும், அவரது உறவினர்களும் திருமண மண்டபத்துக்கு வந்துள்ளனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு உணவு சமைக்கும் ஏற்படும் நடந்துகொண்டிருந்தது.

ஆனால் மணப்பெண் வீட்டார் மண்டபத்திற்கு வராத நிலையில் அவர்களுக்கு மணமகன் வீட்டார் போன் செய்துள்ளனர். அப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகு நிலையம் சென்று வருவதாக கூறிச்சென்ற மணப்பெண் வீடு திரும்பவில்லை என பெண் வீட்டார் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகன் மற்றும் அவரது பெற்றோர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இதனால் வேதனையடைந்த மணமகன் வீட்டார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணப்பெண் மாயமானதால், மணமகளுக்கு எடுத்து கொடுத்த நகை, பட்டுப்புடவைக்கான பணம், வரவேற்பு நிகழ்ச்சிக்கு விருந்து வைக்க செய்த செலவு உள்ளிட்டவைகளை பெண் வீட்டார் நஷ்டஈடாக தரும்படி புகார் கொடுத்துள்ளனர்.