சினிமா பாணியில் உல்லாசம்!! கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து 17 வயது சிறுமியை சீரழித்த நண்பன்..

சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து சக நண்பன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது நண்பரான ஸ்வீட்டோஸ் என்பவருடன் தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஜூலை 3ஆம் தேதி இரவு கோவளம் பகுதியிலுள்ள ரிசார்டுக்குச் சென்றுள்ளார்.
ரிசார்ட்டில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஸ்வீட்டோஸ் அவரது தோழியான 17 வயது சிறுமிக்கு தெரியாமல் அங்கு வைத்திருந்த குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். பிறகு அந்த சிறுமி அதை வாங்கி குடித்த உடன் சிறிது நேரத்தில் சுயநினைவின்றி தள்ளாடியுள்ளார்.
இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட ஸ்வீட்டோஸ், சிறுமியை யாருக்கும் தெரியாமல் ஒரு தனி அறைக்குள் கூட்டிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த சிறுமி, தான் ஒரு தனி அறையில் இருப்பதையும், தான் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதையும் உணர்ந்துள்ளார்.
அங்கேயே கதறி அழுத அந்த சிறுமி உடனே ரிசார்டில்லிருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்து தனது தாயிடம் நடந்த கொடுமையெல்லாம் கூறி கதறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்வீட்டோஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.