6 மனைவி! 10 கள்ளக்காதலி அதுமட்டுமா.. பேருந்தில் நடந்த அட்டூழியம்! அம்பலமான கண்தெரியாத நபரின் ரகசியங்கள்!

6 மனைவி! 10 கள்ளக்காதலி அதுமட்டுமா.. பேருந்தில் நடந்த அட்டூழியம்! அம்பலமான கண்தெரியாத நபரின் ரகசியங்கள்!


blind-man-cheating-50-lakhs

சேலம் அம்மாபேட்டை சேர்ந்தவர் அஷ்ரஃப் அலி.  24 வயது நிறைந்த இவர் எஞ்சினியரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார்.  இந்நிலையில் அவர் சமீபத்தில் வேலைக்காக பெங்களூரில் இன்டர்வியூக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு பேருந்தில் டேவிட் என்ற கண் தெரியாத நபர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் அஸ்ரப்பிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பின்னர் நட்பின் அடிப்படையில் அவரது போன் நம்பரை வாங்கி கொண்டு,அடிக்கடி போன் செய்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து டேவிட் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, அஷ்ரப்பிடம் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மூன்று தவணையாக பெற்றுள்ளார். 

ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் இதுகுறித்து கேட்டதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து அஷ்ரப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

blind

அதாவது  பேருந்தில் பயணம் செய்யும் டேவிட்  பக்கத்தில் ஆண்,  பெண் யாராக இருந்தாலும் அவர்களிடம் நைசாக பேசி நெருக்கமாக பழகி விடுவார். பின்னர் அவர்களது செல்போன் நம்பரை வாங்கி அவர்களிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார்.பின்னர்  தனக்கு மேலிடத்தில் தொடர்பு இருப்பது போலவும், வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியும் பலரிடமும் பண மோசடி செய்துள்ளார்.இவ்வாறு அவர் ஆறு வருடத்தில் மட்டும் 65 பேரிடம் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை மோசடி செய்துள்ளார். 

அதுமட்டுமின்றி டேவிட் நாமக்கல்,  தர்மபுரி,  ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 6 பெண்களை திருமணம் செய்துள்ளார். மேலும் பெங்களூர் கரூர்,  நாமக்கல், ஈரோட்டில் 10ற்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகள் உள்ளதாகவும் டேவிட்  கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.